புதிய அரசாணையை ரத்து செய்து,
பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்க மாநில தொடர்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி ஆகியோர் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தனர் . அப்போது அவர்கள் கூறியதாவது :-
தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றன இதில் சுமார் 2,750 புதிய தட்டச்சு பள்ளிகள் 2023 அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது. இதை நம்பி ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் தட்டச்சுப் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள்
இந்த நிலையில் 2027 ஆம் ஆண்டு முதல் புதிதாக கணினி வழியில் தமிழ் தட்டச்சு பயிற்சியை தொடங்கும்.
ஆகவே தேர்வர்கள் கம்ப்யூட்டரில் தமிழ் 99 விசை பலகை வழியே மட்டுமே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என அரசாணை எண் 187ல் தெரிவிக்கப்பட்டது.
இது தட்டச்சு பயிற்சி பள்ளிகளை நடத்துபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த அரசாணைக்கு எதிராக வணிகவியல் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சிலர் அரசாணை அமலுக்கு வந்தது என்பது போன்ற செய்திகளை தவறாக வெளியிடுகிறார்கள்.
இது வருகிற ஆகஸ்ட் மாதம் தட்டச்சு தேர்வுக்கு தயார் செய்து கட்டணம் செலுத்தி பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது..
ஆகவே தமிழக அரசு 187 அரசாணையை ரத்து செய்து
அரசின் அங்கீகாரம் பெற்ற டைப்ரைட்டிங் பள்ளிகள் மூலமாகவே அரசு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் முறையான பயிற்சி அளிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் இந்த கோரிக்கை தொடர்பாக நேற்று இவர்கள் திருச்சிக்கு வருகை தந்த அமைச்சர் புஸ்ஸி ஆனந்தையும் சந்தித்து மனு அளித்துள்ளனர்

