திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய்க்காக முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய ஆர்.கே. ராஜாவுக்கு வாய்ப்பு.
திருச்சியில் நடிகர் விஜய்க்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கியவர் ஆர். கே. ராஜா, தற்போது தமிழக வெற்றி கழகத்தில் மிக முக்கியமான திருச்சி மாவட்ட நிர்வாகியாகவும், கட்சியின் தீவிர உழைப்பாளியாகவும் செயல்பட்டு
வருகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதமிழக வெற்றிக்கழக கட்சித் தலைவர் விஜய், அத்தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அங்கு விரைவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராகப் போட்டியிட ஆர்.கே. ராஜா விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்; அவருக்கு சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.
கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து திருச்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன்பே விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவியினை வழங்கி வருகிறார் . அண்மையில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி திருச்சியில் பிரம்மாண்ட ரத்ததான முகாம் மற்றும் நல திட்ட முயற்சிகளை அமைச்சர் ரமேஷ் மற்றும் துணை சபாநாயகர் மூலம் சிறப்பாக செய்து இருந்தார்.

தலைவர் விஜய் பூரண நலத்துடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என திருச்சியில் தவெக தொண்டர்களைத் திரட்டி ‘தங்கத் தேர்’ இழுத்து வழிபாடு நடத்தும் அளவிற்கு விஜய் மற்றும் கட்சி மீது தீவிர பற்று கொண்டவராக உள்ளார்.
நீண்டகால உழைப்பு, தீவிர விசுவாசம் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் கட்சித் தலைமை இவரது பெயரை முதன்மையாகப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இவருக்குப் போட்டியாக முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணனின் மகன் கே.சிரஞ்சீவி பெயரும் பலமாக அடிபடுகிறது. இருப்பினும், ஆரம்ப கால ரசிகர் மன்ற உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் ஆர்.கே. ராஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆர்.கே. ராஜா போன்ற தீவிர உழைப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தவெக தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளதால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வரும்போது அதிகாரப்பூர்வ வேட்பாளர் விவரம் விரைவில் உறுதியாக வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர் .

