திருச்சியில் இன்று விடியற்காலை டூவீலரில் இருந்து இருந்து தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவன் சாவு . பெற்றோருக்கு ரூ.25000 அபராதம்,3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமா?
திருச்சியில் இன்று விடியற்காலை டூவீலரில் இருந்து
இருந்து தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவன் சாவு . பெற்றோருக்கு ரூ.25000 அபராதம்,3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமா?
கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதி விபத்து .
திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நஜ்புதீன் இவரது மகன் முகமது ஹஷார்
(வயது 14 ). 9ம் வகுப்பு படித்து வந்தார். இதே போன்று
திருச்சி சீனிவாசன் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ரவிக்குமார் (வயது16). பிளஸ் 1 மாணவன். இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
வழக்கமாக முகமது ஹஷார் பள்ளிவாசலில் அதிகாலையில் நடைபெறும் தொழுகையில் பங்கேற்று வந்தார்.
அதைத்தொடர்ந்து தொழுகைக்கு முன்பாக உடற்பயிற்சி செய்யும் நோக்கத்தில் முகமது ஹஷாரும், ரவிக்குமாரும் மோட்டார் சைக்கிளில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை முகமது ஹஷார்
ஓட்டிச் சென்றார்.
இந்த மோட்டார் சைக்கிள் எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவை தாண்டி சென்ற போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள நடை பயிற்சி நடைமேடையில் சென்று மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த முகமது ஹஷாரை
மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் முகமது
ஹஷார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் ரவிக்குமார் கையில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பள்ளி மாணவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் அவனது அண்ணனுக்கு சொந்தமானது என்பதும், அண்ணனுக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் திருச்சி பள்ளி மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர்களுக்கு ரூ.25000 அபராதம்,3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக காவல்துறையின் சட்ட விதி நடைமுறையில் உள்ளது .எனவே விபத்தில் மாணவன் இறந்ததற்கு அவர்களது பெற்றோர் காரணமாகும் எனவே மாணவியின் பெற்றோருக்கு இத்தண்டனை வழங்கப்படுமா என்பதை சமூக ஆர்வலர்கள் கேள்வியாகும்,
இது போன்ற சட்டங்கள் கடுமையானால் தான் பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பார்கள் .

