திருச்சி மாநகராட்சி கோ – அபிஷேகபுரம் மண்டலக்குழுக் கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது-
திருச்சி மாநகராட்சி
கோ – அபிஷேகபுரம் மண்டலக்குழுக் கூட்டம்
மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது-
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டலக் குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், செயற் பொறியாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலை ஆகியோர் வகித்தனர். கூட்டத்தில்
மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், கமால் முஸ்தபா, ராமதாஸ், முத்துக்குமார், சுரேஷ்குமார், பைஸ் அஹமது, விஜயா ஜெயராஜ், நாகலட்சுமி நம்பி, பங்கஜம் மதிவாணன்,
சோபியா விமலா ராணி, மற்றும் கண்காணிப்பாளர் பால முருகன், இளநிலை பொறியாளர்கள் கணேஷ்பாபு, சகாயம், சந்திரசேகர், பாலமுருகன், சுகாதார அலுவலர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் ,சந்தோஷ்குமார்,ரேவதி,சூர்யா, ஆன்ட்ரு ரெனால்டு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அதை மண்டல குழு தலைவர், உதவி ஆணையர் ஆகியோர் ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

