Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் (செவ்வாய்க்கிழமை) 30.06.2026 ஒருநாள் இருக்காது.

Ad banner

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (30.6 .2026) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினையகம் ரத்து செய்யப்படுகிறது என திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

TVK ad

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய் குடமுருட்டி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் உந்து குழாயுடன் இணைக்க வேண்டியுள்ளது. இப்பணி 29.06.2026 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை, டர்பன் நீரேற்று நிலையம், நீரேற்று நிலையத்திலிருந்து, மலைக்கோட்டை, சிந்தாமணி, ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 30.06.2026 ஒருநாள் இருக்காது.

01.07.2026 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.