திருச்சியில் அடுத்த ஆண்டு மாநில மாநாடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சியில் அடுத்த ஆண்டு மாநில மாநாடு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் இன்று பழைய பால் பண்ணை அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட பொருளாளர் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அடுத்த ஆண்டு மாநாடு திருச்சியில் நடத்துவது, திருச்சியில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் ,
வங்கிகள் மூலமாக சிறு குறு வணிகர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும், வணிகர்கள் மீது செலுத்தப்படும்சுமைகளை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிர்வாகி கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏராளமான வியாபாரிகள் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

