தமிழக காவல்துறைக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.விவெங்கட் அவர்களின் வேண்டுகோள்.
அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100

நேற்று 27 /6/ 2026 இரவு 10 மணி அளவில் பீமநகர் அருகில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் K. பிரேம் ஆனந்த் என்பவர் மயக்கமடைந்து இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது அதன் பிறகு சரியாக இரவு 11:39 மணி அளவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொடர்புக்கு கொண்டு 2 நிமிடம் 34 நொடி காத்திருந்தும் எந்த பதிலும் வரவில்லை மேலும் மீண்டும் முயற்சித்தும் இணைப்பு கிடைக்கவில்லை இவ்வாறு இருந்தால் அவசரத்திற்கு பொதுமக்கள் எவ்வாறு பயன்பெறுவார்கள் ஆகையால் இதனை உடனே பொதுமக்கள் நலன் கருதி சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
காவல்துறைக்கு முயற்சி செய்த ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது.

