திருச்சியில்
தோழியின் திருமணத்துக்கு செல்வதாக கூறி சென்ற இளம் பெண் மாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை செப்பாலப்பட்டி வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் யோகா (வயது 23.)

இவர்கள் தற்போது திருச்சி இ பி ரோடு வேதாத்திரி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று யோகா மதுரையில் உள்ள தனது தோழி திருமணத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
யோகாவின் பெற்றோர் உற்றார், உறவினர் மற்றும் யோகாவின் தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த தகவலும் இல்லை.
இதையடுத்து அவரது தாயார் அமுதா கோட்டை காவல் நிலைய போலீசில் புகார் மனு அளித்துள்ளார், அந்த புகார் மனுவின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

