Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கருமண்டபத்தில் மது குடிக்க தந்தை பணம் தராததால் தீக்குளித்து சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சி கருமண்டபத்தில்

Ad banner

மது குடிக்க தந்தை பணம் தராததால் தீக்குளித்து சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை .

 

திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர்  சக்திவேல் இவரது  இளைய மகன் கங்காதரன் (வயது 27) மதுவுக்கு அடிமையான இந்த வாலிபர் எந்த வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

TVK ad

கங்காதரன் அடிக்கடி பெற்றோரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று மது போதையில் வீடு திரும்பிய அவர் மீண்டும் தந்தை சக்திவேல் மற்றும் அண்ணன் பிரபாகரனிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து உள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்து விட்டானர் என கூறப்படுகிறது – இதனால்

மனம் உடைந்த கங்காதரன் யாரும் எதிர்பாராத வகையில் டீசலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர் உடல் முழுவதும் எறிந்து கதறி துடித்த அவரை தந்தை சக்திவேல் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார், அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கங்காதரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.