Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது .

0

'- Advertisement -

ஸ்ரீரங்கத்தில்

Ad banner

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது .

TVK ad

திருச்சி திருவானைக்காவல் ஸ்ட்ரங் ரோடு பகுதியில்  மூன்று வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை சோதனைக்கு உட்படுத்திய போது

சீட்  கவரில் 260 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த மூன்று வாலிபர்களையும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் அரியலூர் மாவட்டம் கருப்பூர் பொய்யூர் தெற்கு தெருவை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 21 ) கருப்பூர் குலமாணிக்கம் வேந்தன் தெரு (அஜித் 19) கருப்பூர் கீழப்பழுவூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 20) என்பது தெரியவந்தது, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது .

இதே போன்று உறையூர் காவல் நிலைய போலீசார் கஞ்சா விற்ற உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவை சேர்ந்த உசேன் பாஷா (வயது 27) முகமது இர்பான் ( வயது 22 )ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் பணம் வைத்து சூதாடிய திருச்சி அரியமங்கலம் அண்ணா நகர் அம்பிகாபுரம் மேல் அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 39) அரியமங்கலம் நேருஜி நகர் காந்தி தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் ராஜ் (வயது 25) ஆகிய இரண்டு பேரை அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.