Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் முந்திரி, பாதம் திருட்டு .

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெட்டில்

Ad banner

கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் முந்திரி, பாதம் திருட்டு .

 

மர்ம ஆசாமிகள் கைவரிசை.

 

 

திருச்சி,

காந்தி மார்க்கெட், பேகம் பள்ளிவாசல் அருகே நித்யானந்தம் என்பவர்

பாதாம்,

முந்திரி பருப்பு விற்பனை செய்யும் மொத்த வியாபாரக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 10ந் தேதி வியாபாரம் முடிந்து உரிமையாளர் நித்யானந்தம் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

பிறகு நள்ளிரவு சுமார் 1:30 மணி அளவில், அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் கடையின் பூட்டை மிக லாவகமாக உடைத்து உள்ளே சென்று கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ 60 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த பாதாம், முந்திரி பருப்புகளை அந்த மர்ம கும்பல் மூட்டையாகக் கட்டி அள்ளிச் சென்று விட்டது.

இந்த நிலையில் மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த  நித்யானந்தம், உடனடியாக இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பூட்டை உடைத்து ரூபாய் 80 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.