ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் ரூ. 85 ஆயிரம் மோசடி செய்து மிரட்டல் விடுத்த பத்திர.எழுத்தர்.
திருச்சி திருவளர்ச்சோலை ராமச்சந்திரன் கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 62) இவர் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு பத்திர எழுத்தரிடம் தன்னுடைய சொத்துக்களை அவரது மகனின் பெயருக்கு மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு இரண்டு தவணையாக கடந்த பிப்ரவரி மாதம் ரூபாய் 45 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
பிறகு நீண்ட நாட்கள் ஆன நிலையில் அந்த பத்திர எழுத்தர் அமிர்தா வள்ளியின் மகனுக்கு சொத்துக்களை பெயர் மாற்றம் செய்யவில்லை.
பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக அவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது அமிர்த வல்லிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக அமிர்தவல்லி ஸ்ரீரங்கம் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட ஸ்ரீரங்கம் பத்திர எழுத்தர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட பத்திரஎழுத்தர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

