Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மது அருத்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்

0

'- Advertisement -

திருச்சியில் மது அருந்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொன்ற கணவன் கைது.

Ad banner

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சின்னம்மாள் (வயது 42) . இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் குடிப்பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது இதனால் வீட்டில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்று விட்டு குடிப்பதற்கு பணம் இல்லாததால் தன் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். குடிப்பதற்கு பணம் கொடுப்பதற்கு மனைவி தர மறுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகில் இருந்த குக்கரின் மூடியால் தனம் மனைவி சின்னம்மா லின் தலையில் தாக்கியுள்ளார். குக்கர் மூடியால் தாக்கியதால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் சின்னம்மாள். இச்சம்பவம் பற்றி ஜீயபுரம் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜீயபுரம் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விசாரணை செய்தனர் .பின்னர் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இறந்த சின்னமளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து செந்தில் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.