வரகனேரியில் குழுமியானந்த சுவாமிகளின் 126-வது குரு பூஜையை முன்னிட்டு 3 நாள் விழா.
திருச்சி வரகனேரி குமிழிக்கரையில் உள்ள பிரம்மஸ்ரீ ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் திருக்கோவிலில் 126-வது குருபூஜை விழா இன்று வெள்ளிக்கிழமை 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை 5-ம் தேதி காலை 6 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதலுடன் விழா தொடங்குகியது. காலை 9.30 மணிக்கு சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பாராயணம், 11 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு R. விஸ்வநாதன் விழாவை துவக்கி வைக்கிறார். R. காஷ்யப் மகேஷ் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார். 
நாளை சனிக்கிழமை 6-ம் தேதி காலை 9 மணிக்கு சுந்தர் தேவாரம் பாராயணம், மதியம் 12 மணிக்கு செ. அண்ணாவி பிள்ளை குடும்பத்தினர் உபயத்தில் மகா அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு J. காசிநாதன் தலைமையில் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவு நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை 7-ம் தேதி காலை 9 மணிக்கு சிவஸ்ரீ. சுப்பையா, நளினா வாசுதேவன் தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெறுகிறது. மதியம் T.M. சுந்தரமூர்த்தி உபயத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மாலை 6.30 மணிக்கு சிவசங்கரி பரதநாட்டியாலயா குழுவினரின் நாட்டியாஞ்சலி, இரவு 7.30 மணிக்கு அஞ்சலி நாட்டியாலயா குழுவினரின் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு விடைபெற்று விழாவுடன் குருபூஜை நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை தலைவர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர். தொடர்புக்கு: 94866 34480, 99524 61610.

