துறையூர் அருகே இஸ்திரி பெட்டியால் மனைவியை சூடு வைத்து சித்தரவதை செய்த ரவுடி கைது .

திருச்சி துறையூர் மருக்களாம் பட்டி கட்டணாமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 46). இவர் தனது மூத்த சகோதரியின் மகளான லாவண்யா (வயது 29 )என்பவரை கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டார் .
இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
விநாயகமூர்த்தி ஜம்புநாதபுரம் காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ளார்.இந்த நிலையில்
சமீபகாலமாக கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்த விநாயகமூர்த்தி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிச் தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த முயற்சி பலிக்காததால் இஸ்திரி பெட்டியால் சூடு வைத்து சித்தரவதை செய்து வந்துள்ளார். மேலும் துணியால் கழுத்தை நெரித்து அவரைத் கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட லாவண்யாவை உறவினர்கள் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து லாவண்யா அளித்த புகாரின் அடிப்படையில் விநாயகமூர்த்தியை ஜம்புநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது கொலை முயற்சி பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

