Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே பணத்தாசை, பதவி ஆசை பிடித்து மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர்,தொண்டர்கள் இல்லை .திருச்சி அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆவேசம்.

0

'- Advertisement -

திருச்சி அதிமுக மலைக்கோட்டை பகுதி ( தெற்கு) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று பாபு ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 

Ad banner

இக் கூட்டத்தில் தலைமை வகித்த திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் நிர்வாகிகள் இடையே ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

 

அதிமுக கட்சி என்பது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஆலமரமாக வளர்ந்து உள்ளது.தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதனை கட்டிக் காத்து வருகிறார்.

 

ஒரு சிலர் தேர்தலுக்குப்பின் பிரிந்து சென்றாலும் மீண்டும் தாய் கழகத்தில் இணைவார்கள்.

 

தற்போது திருச்சியில் ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து உள்ளனர்.அவர்கள் புதிய கட்சியில் பதவிகள் பெறலாம்,ஆளும் கட்சியில் இருந்தால் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள் மட்டுமே மாற்றுக் கட்சிக்கு செல்வார்கள்.

தொண்டர்கள் யாரும் மாற்றுக் கட்சிக்கு செல்லவில்லை,

ஏனென்றால் நேற்று நடைபெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொண்ட தொண்டர்களே சாட்சி.எந்த தொண்டனும் அதிமுகவே விட்டு விலக மாட்டான்.மாவட்ட செயலாளராக என்னை அறிவித்த அன்றே கூறினேன் பணம் கொடுத்து யாரையும் எந்த நிகழ்ச்சிக்கும் அழைத்து வர வேண்டாம் நம் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டால் போதும் எனக் கூறினேன்,அதேபோல் நேற்று நம் தொண்டர்கள் மட்டுமே வந்தது பல ஆயிரம் பேர் .இந்த நிகழ்வில் ஆளுங்கட்சி உள்ளிட்ட வேற எந்த கட்சிக்கும் இவ்வளவு கும்பல் வரவில்லை .

எனவே நாம் தொடர்ந்து கட்சிப் பணியுடன் மக்கள் பணி செய்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் அமர உறுதி எடுத்து உழைக்க வேண்டும் என பேசினார்.

 

முன்னதாக கழக அமைப்பு செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல்,முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றி நிர்வாகிகளுக்கு பல ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் அம்மா பேரவை மாநில துளை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன்,

வெல்லமண்டி ஜவர்கலால் நேரு,மாவட்டத் துணைச் செயலாளர் வனிதா,பகுதி செயலாளர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் வெல்லமண்டி சண்முகம், பிளாட்டோ,வட்ட செயலாளர்கள் என 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் பகுதி செயலாளர் அன்பழகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.