திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஆளும் ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராட்டு
திருச்சி திமுக தெற்கு மாவட்ட மாநகர செயற்குழு கூட்டம்.

நேற்று வியாழக்கிழமைமாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட மாநகரக் செயற்குழு கூட்டம் மாநகர அவை தலைவர் நூர்கன் தலைமையிலும், மாநகர செயலாளர்
மு மதிவாணன் முன்னிலையிலும் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகர நிர்வாகிகள் பகுதிகழக செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் ,மாவட்ட பிரதிநிதிகள் மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாநகர தி.மு.க. மற்றும் திருச்சி தெற்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்
திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்ததற்கு, திமுகத் தலைவர் அவர்களுக்கு இச்செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
வாக்காளர்களுக்கு நன்றி:
திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த மாநகரச் செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
சட்டமன்றத்தில் சிறுபான்மை அரசு தனது நம்பிக்கையை நிரூபிக்கும் நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவராக உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய கேள்விகள் பாராட்டப்பட்டன. கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு 2500 ரூபாய் உரிமைத் தொகை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு அனைத்து இடங்களுக்கும் இலவசப் பயணம், மற்றும் குடும்பத்திற்கு
6 சிலிண்டர்கள் வழங்கும் திட்டங்களை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். தவெக முதலமைச்சரின் ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு இக்கூட்டம் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்றும்;
ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் கொண்டுவரப்பட்டு, தற்போது கட்டப்பட்டு வரும் திருவெறும்பூர் பேருந்து நிலையத்திற்கு “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்” அவர்களின் பெயரைச் சூட்டி, பணியைத் துரிதப்படுத்தித் திறக்க வேண்டும் என இம்மாநகரச் செயற்குழு கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இக்கூட்டத்தில் மாநகரக் நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

