Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2008 ல் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு 2 ஆண்டு சிறை.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி, அழகாப்பட்டி கீழப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பி.ராமசாமி.

Ad banner

இவரது மகன் ஆர்.செல்லதுரை ஆவார்.

 

செல்லதுரை, அவரது தகப்பனார் மற்றும் பெரியப்பா பெயர்களில் கூட்டாக உள்ள நிலங்கள் பொருத்து மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தில் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்குவதற்காக, திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி (மேற்கு) கிராம, கிராம நிர்வாக அலுவலர் பா.முரளீதரன் என்பவர், லஞ்சமாக ரூ. 3 ஆயிரம் கேட்டது தொடர்பாக முரளீதரன் மீது கடந்த 17.11.2008ஆம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

அதனை தொடர்ந்து 17.11.2008ஆம் தேதி மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் செல்லதுரையிடம் லஞ்சம் பணம் ரூ. 3 ஆயிரத்தை கேட்டு பெற்ற போது முரளீதரன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அதன்படி விசாரணை முடிவுற்று நேற்று (15.05.2026) வெள்ளி கிழமை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு, முரளீதரனுக்கு லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 2 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

 

அதோடு அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதங்கள் மெய்க்காவல் சிறை தண்டனை விதித்தும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 2 வருடங்கள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராத விதித்தும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதங்கள் மெய்க்காவல் சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனைகளை ஒருங்கிணைந்து ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கினை திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. மணிகண்டன், காவல் ஆய்வாளர் ஞா.சக்திவேல் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிகண்ணன் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு 18 ஆண்டுகளுக்குப் பின் உரிய தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.