Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மேற்கு தொகுதியில் பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு .

0

'- Advertisement -

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தனக்கு வாக்களித்த மேற்கு தொகுதி மக்களுக்கு பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு .

Ad banner

இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்த லில், திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான திமுக முதன்மைச் செயலாளருமான கே. என். நேரு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொண்டார்.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு கே.என். நேரு வார்டு எண்-51,52,53,54,55,56 பகுதிகளை சேர்ந்த செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், மார் சிங்பேட்டை, அந்தோணி யார் கோவில் தெரு, கான்வென்ட் ரோடு, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை முத்தரையர் சிலை, சேவா சங்கம், ராஜா காலனி, மிளகு பாறை, பொன் நகர், செல்வ நகர், கருமண்டபம், பிராட்டியூர், ராம்ஜி நகர், கொத்தமங்கலம்

ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை திறந்த வேனில் சென்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.அப்பொழுது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,

பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் மற்றும் திமுக நிர்வாகிகள், விசிக மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், மற்றும் கூட்டணி கட்சி, திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல இன்று மாலை 4 மணி முதல் 62,57,58,60 வார்டுகளுக்கு உட்பட்ட பஞ்சப்பூர், செட்டியபட்டி, ராமச்சந்திரா நகர், எடமலைப் பட்டி,அந்தோணியார்கோயில் தெரு, நல்ல கேணி தெரு, மாரியம்மன் கோயில் தெரு,, கிராப்பட்டி சர்வீஸ் ரோடு, கான்வென்ட் தெரு, டி எஸ் நகர், அருணாச்சலம் நகர், பாரதி நகர், சிம்கோ காலனி, சக்திவிநாயகர் கோவில்தெரு, கிராப்பட்டி மெயின் ரோடு, தொண்டைமான் காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், தேவ ராயனேரி, ரங்கா நகர் ஐந்து மற்றும் மூன்றாவது தெரு, மங் கம்மா சாலை, எஸ் எம் இ சி காலனி, சுந்தர் நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை முஸ்லிம் தெரு, காஜாமலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றர்.

 

தொடர்ந்து நாளை (16ம் தேதி) சனிக்கிழமை

காலை 7 மணிக்கு

8,9,10,11,22,27 ஆகிய வார்டுக்கு உட்பட்ட

அரவானூர், லிங்கநகர், நாடார் தெரு, தியாகராய நகர், பாத்திமா நகர், வெக்காளியம்மன் கோவில், வண்டு ஜிம், முஸ்லீம் தெரு, பாண்டமங்கலம் கல்நாயக்கன் தெரு, மேட்டுத் தெரு, வண்டிக்காரத்தெரு. போலீஸ் ஸ்டேசன் வழி, பங்காளி தெரு, பாளையம் பஜார், எம்ஆர்ஜி பில்டிங், நாச்சியார் கோவில், டாக்கர் ரோடு, நவாப் தோட்டம், சோழராஜபுரம் பெருமாள் கோவில் தெரு, நாராயணா நகர், அண்ணாமலை நகர் தில்லைநகர் மெயின் 5வது குறுக்கு தெரு, செங்குளத்தான் கோவில் தெரு, 7வது கிராஸ், மூவேந்தர் நகர், தூக்குமேடைத்

தெரு ,80 அடி ரோடு வழி, 10வது குறுக்குத்தெரு, தென்னூர் இபி வழி, கல்யாணபுரம் வாமடம், தென்னூர் மந்தை, ஜெனரல் பஜார், பட்டாபிராமன் தெரு, கீழசத்திர ரோடு. VNP தெரு, ஆட்டு மந்தை தெரு, சவேரியார் கோவில், தாசில்தார் சந்து வழியாக திறந்த வேனில் சென்று பொது மக்களை சந்தித்து கே.என். நேரு நன்றி தெரிவிக்கிறார்.

 

பிறகு மாலை 4 மணிக்கு 25,26,24,23,28,29 ஆகியவார்டுகளுக்கு உட்பட்ட

சண்முகா நகர், ரெங்கா நகர், கொடாப்பு ரோடு வடக்கு தெரு, கீழத்தெரு, சீனிவாசா நகர் 5வது மெயின்ரோடு, அம்மையப்பிள்ளை நகர், குமரன் நகர், பேங்கர்ஸ் காலனி, கல்லாங்காடு, பாரதி நகர்,எம்ஜிஆர் நகர், திடீர் நகர், புத்தூர் மந்தை அக்ரஹாரம், வண்ணாரப்பேட்டை மேலத்தெரு, தெற்கு முத்துராஜா தெரு, வடக்கு முத்துராஜா தெரு, அகமது காலனி, ராமலிங்க நகர் 2வது மெயின்ரோடு, ராஜரத்தினம் பிள்ளை தெரு, கனரா பேங்க் காலனி, சீனிவாசநகர், 6,7 வது தெரு, நெசவாளர் காலனி, இராமலிங்க நகர் 1 மெயின்ரோடு, குறத்தெரு, பாளையம் பஜா செட்டித்தெரு, தேவர் காலனி, காந்திபுரம், வாணியசெட்டிதெரு, வைக்கோல்காரத்தெ செவந்திபிள்ளையார் கோவில் தெரு, எடத்தெரு, திரௌபதியம்மன் கோவில் தெரு குத்பிஷா நகர், வெள்ளாளர் தெரு, காவல்காரத்தெரு, பாரதி நகர், சத்யா நகர், பிச்சை டீக்கடை, ஆழ்வார்தோப்பு, அண்ணாநகர் உக்கரகாளியம்மன் வழி, ஹியாத்நகர் பள்ளிவாசல், அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெரு, காயிதேமில்லத் நகர் பள்ளிவாசல்,ஆகிய பகுதிகளில் மேற்கு தொகுதி எம்எல்ஏ கே என் நேரு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.