திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடந்த விழாவிற்கு நகர் நல சங்க தலைவர் கி. ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
நகர் நல சங்க செயலாளர் துரை செந்தில்குமார் தொழிலாளர்கள் தின வரலாற்றை எடுத்துக் கூறி தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.
மாநகராட்சி ஊழியர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி பேசினார். இதையடுத்து அவர்களுக்கு நகல் நல சங்க உறுப்பினர்களின் சார்பில் நன்றியை தெரிவித்தார்.
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சதாம் உசேன் பேசினார்.
நகர் நல சங்கத்தின் மூத்த உறுப்பினர் டில்லிராஜன் தொழிலாளர் தின உறுதி மொழியை வாசிக்க மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் சமூக ஆர்வலர்கள் வி.பாரதி, மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

