திருச்சியில் கத்தியை காட்டி ரூ.1000 பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சூசையப்பார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்மணிராஜா (வயது 29) இவர் நேற்று மேல அம்பிகாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ரவுடிகள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.1000 பணத்தை பறித்து சென்றனர்.இது குறித்த புகார் என்பது அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்மலை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த பிரசாந்த் (வயது வயது 26 ) அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் ( வயது 27 )ஆகிய இருவரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்த ரூ. 500 பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து உள்ளனர் போலீசார்.

