Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரயிலில் அடிபட்டு இஸ்லாமிய முதியவர் பலி.அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் …..

0

'- Advertisement -

திருச்சி : நேற்று திங்கள்கிழமை (27.04.2026) மாலை 3 மணிக்கு முன்பாக திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.

Ad banner

இறந்த நபர் வெள்ளை நிற ஊதா கட்டம் போட்ட முழுக்கை ரெடிமேட் சட்டையும், நீல நிற ரெடிமேட் பேண்ட்டும், கருப்பு நிறத்தில் காலணியும் அணிந்துள்ளார். இறந்த நபர் இஸ்லாமியர் என தெரிய வருகிறது. இறந்த நபரின் உடலை கைப்பற்றி திருச்சி ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்டாலின் தலைமையிலான ரயில்வே போலீசார் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நபரைப் பற்றி விவரம் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 9080563321 மற்றும் 9443472524 .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.