சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
திருச்சியில் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்தது.

திருச்சி புத்தூர் களத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மு.வெங்கடேஷ் (வயது 24). இவா், கடந்த 2023 ஜனவரி 25-ஆம் தேதி உறையூா் ராமலிங்கா நகரில் கடைக்குச் சென்ற சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸார் போக்ஸோ வழக்குப் பதிந்து வெங்கடேஷை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகபிரியா அதிரடியாக தீர்ப்பளித்து உள்ளார்.

