Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொகுதி மறுவரையறை ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு ,கூட்டாட்சிக்கு எதிரானது. திருச்சியில் துரை வைகோ பேட்டி

0

'- Advertisement -

தொகுதி மறுவரையறை ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு ,கூட்டாட்சிக்கு எதிரானது

 

Ad banner

திருச்சியில் துரை வைகோ எம்.பி. பேட்டி

 

திருச்சி எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது :-

 

தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகளின் எண்ணைக்கைகளை அதிகரிக்கவும், நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் அவசர அவசரமாக இதை கொண்டு வருகிறார்கள்.

பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம் ஆனால் தொகுதி மறுவரையை என்கிற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தான் பாதிக்கப்படும்.

2011 மக்கள் தொகை கணக்கின் படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார்கள். அப்படி செய்யும் பொழுது அதில் மிகப்பெரிய பாதிப்பை தான் ஏற்ப டுத்தும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாதததால் இந்த மசோதா நிறைவேற்றப்படாது என்கிற நம்பிக்கை உள்ளது.

ஏற்கனவே பாஜக ஆளாத மாநிலங்களுக்கு உரிய திட்டங்கள், நிதி வழங்கப்படுவதில்லை. கலாசர திணிப்பு மொழி திணிப்பு என எல்லா திணிப்புகளை மேற்கொண்டு இருக்குக் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் சிறிதளவாது அதை காக்க முடிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் அதையும் செய்ய முடியாது

தொகுதி மறு வரை என்பது

ஜனநாயகத்திற்கு, அரசியல் சாசனத்திற்கு கூட்டாட்சிக்கு எதிரானது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக நிறைவேற்றியது தென் மாநிலங்கள் தான்.

பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் இதை எதிர்க்கிறார்கள் பாஜக கூட்டணியில் உள்ள

அதிமுகவும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.

இதை வைத்து ஓட்டு வாங்கும் முயற்சி இல்லை.

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விடுத்துள்ள எச்சரிக்கை என்பது மக்களின் பிரதிபலிப்பாக உள்ளது.

தொகுதி மறுவரையால் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ள மாநிலங்கள் தான் பாதிக்கப்படும்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் மக்களின் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது.

இங்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என பேசுகிறார்கள் தமிழ்நாடு குற்றங்களின் தலைநகராக மாறிவிட்டது என வடமாநிலத்தில் இருந்து வந்த பாஜக தலைவர் பேசியுள்ளார் ஆனால் டெல்லியில் தான் அதிக குற்றங்கள் நடக்கிறது

உலகத்தின் கிரைம் தலைநகராக டெல்லி மாறி உள்ளது.

விஜய் கட்சியின் கட்டமைப்பு இல்லை. அவர் செல்லும் இடங்கள் எல்லாம் அதிக அளவு கூட்டம் வருவது உண்மைதான் ஆனால் அது வாக்காக மாற வாய்ப்பில்லை

விஜய்க்கு அளிக்கும் வாக்கு பா.ஜ

க விற்கு மறைமுக ஆதரவாக போய் விடும் என அவரை ஆதரிக்கும் சிலரே சிந்திக்கிறார்கள்.

விஜய்க்கு 15 சதவீதம் வாக்குகள் வாங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. அதனால் தற்போது தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

விஜய்க்கு முதல் தலைமுறை வாக்குகள் தான் உள்ளது ஆனால் அவர்கள் வாக்களிக்க வருவார்களா என்பதே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் நாளன்று பிக்னிக் சென்று விடுவார்கள்.

எம்ஜிஆரையும் விஜய்யையும் ஒப்பிட முடியாது எம்ஜிஆர் நீண்ட காலம் திமுகவில் பயணித்து ஈடுபட்டவர். ஆனால் விஜய் கட்சியில் அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லை அங்கு கட்டமைப்பு இல்லை என அவர்  பேட்டியின் போது கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன், பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.