Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காலையில் கதிரவன் வழங்கிய கூப்பனால் ஒரு உயிர் போனது.மாலையில் நேருவின் அட்டகாசம் . திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவின் சார்பில் ரூ.8000 கூப்பன் வழங்கிய நிர்வாகிகள் .

0

'- Advertisement -

திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிரவன் சார்பில் டம்மி ரூ.8000 கூப்பன் வழங்கியதில் முறைகேடு என்பதை தட்டிக் கேட்ட தலித் பெண்ணை ஆபாசமாக திட்டி தாக்கியதில் அப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

Ad banner

அந்த பிரச்சனை ஆறாத நேரத்தில் மாலை திருச்சி உறையூரில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சர் கே.என். நேரு அறிவுறுத்தலின் பேரில் உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ, வட்ட செயலாளர் திப்பு சுல்தான் ஆகியோர் நிர்வாகிகளுடன் சென்று உறையூர் பகுதி முழுவதும் திமுக அரசு வெளியிட்டுள்ள ரூ.8000 கூப்பனை டம்மியாக அப்பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் அப்பொழுது சென்று டம்மி கூப்பனை வழங்கிய 6 நபர்களை அழைத்துச் சென்று உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அங்கு அமைச்சர் கூறியதாக இளங்கோ, வட்ட செயலாளர் திப்பு சுல்தான் உள்ளிட்ட 5 பேரை விடுவித்தனர் என கூறப்படுகிறது.

 

இதில் கண்ணன் என்ற டம்மி நபரை ரூ.8000 கூப்பன் விநியோகித்தார் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உண்மையில் எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ன என்பது நாளை முதல் தகவல் அறிக்கை வெளியான பிறகுதான் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.