Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் டிடிவி தினகரன்-அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு.

0

'- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர்,டிடிவி தினகரன் அவர்கள்,

 

Ad banner

வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்,

 

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிடும்,

 

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜசேகரன் மற்றும்

 

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் ஆகியோரை ஆதரித்து,

 

நாளை சனிக்கிழமை (11-04-2026) கீழ்க்கண்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

 

1.திருவெறும்பூர் பேருந்து நிலையம்.

மாலை 6.30 மணி.

 

2.கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில்.

மாலை 7 மணி.

 

3. உறையூர் நாச்சியார் கோயில்.

மாலை 7:30 மணி

 

எனவே, வெற்றி கூட்டணியாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தோழமைக் கட்சிகளின் அனைத்துக்கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.