Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மீண்டும் உங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் . மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன்.

0

'- Advertisement -

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் கதிரவன் மீண்டும் இரண்டாவது முறையாக களம் இறங்கியுள்ளார்.

 

Ad banner

அ.தி.மு.க.வின் வசம் இருந்த இந்த தொகுதியில், கடந்த முறை அறிமுக அரசியல்வாதியாக களமிறங்கி திமுக வசமாக்கியவர் கதிரவன்.தற்போது மீண்டும் திமுக வசமே தொகுதியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில், தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்

தமிழக முதல்வர் முதல்வர் பாணியில், வளர்ச்சித்திட்டங்களை, மக்கள் மேம்பாட்டு திட்டங்களை முன்னிலைப்படுத்தி தனது பிரச்சார வியூகத்தை செயல்படுத்தி வருகிறார் கதிரவன்

எம்.ஜி.ஆர். பாணியில் நான் உங்கள் வீட்டுப்பிள்ளை என்றே உரிமையோடு மக்களுடன் இரண்டறக்கலந்தும் பழகி வரும் மனச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல ஆட்சி தொடர மண்ணச்சநல்லுார் தொகுதி மக்களை நாடி வந்துள்ளேன்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில், முதன் முதலாக உங்களைத் தேடி வந்த என்னை, உங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணி, வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாரி வழங்கி உங்களுக்காக பணியாற்ற வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், மண்ணச்சநல்லுார் தொகுதியில் மட்டும் மகத்தான மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள் மக்கள் மனம் நிறையும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

அந்த வகையில், திருப்பட்டூர் ஊராட்சியில் குடிநீர், சிமெண்ட் சாலை, தார்ச்சாலை, பேவர் பிளாக் சாலை, வடிகால் வசதிகள், பள்ளிக்கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என 7 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதுமலையில் 8.19 கோடி ரூபாயிலும், வரதராஜபுரம் காலனியில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாயிலும் இந்த வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஓமாந்துாரில், குடிநீர் வசதிகள், சிமெண்ட் சாலைகள், காமாட்சி அம்மன் கோயில் பொது கழிப்பிடம் உட்பட ரூ.3.04 கோடி ரூபாயிலும், சிறுகுடியில் ரூ.2.4 கோடியிலும், வீராணியில் ரூ1.18 கோடியிலும், வடக்கு சிறுப்பத்துாரில் ரூ.1.06 கோடியிலும், சாலப்பட்டியில் ரூ.1.18 கோடியிலும், எஸ்.மேட்டூரில் 19.72 லட்சத்திலும், தெற்கு சிறுப்பத்துாரில் ரூ.3.91 கோடியிலும், வலையூரில் ரூ.4.13 கோடியில் என 5 ஆண்டுகள் முழுவதும் இப்பகுதிகளில் மட்டும் சுமார் 35 கோடி ரூபாயில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், அரசின் திட்டங்களால் பயன்பெறாத வீடுகளே இல்லை. துணை முதல்வரின் சிறப்பான பணிகளால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளம் மாணவ, மாணவிகளுக்கும் ஏராளமான திட்டங்களும், பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்கட்சி வேட்பாளர் வருவார், நடிகர் கட்சி வேட்பாளர் வருவார், இன்னும் ஏராளமானோர் வருவார்கள். ஆனால், ஏப்ரல் 23-ம் தேதி உங்கள் நினைவில் வர வேண்டியது உதயசூரியன் சின்னமும், உங்களுக்காக 2-ஆம் முறையாக உழைக்க காத்திருக்கும் உங்கள் வீட்டுப்பிள்ளை, எப்பொழுதும் மண்ணை மக்களின் நலத்தையே விரும்பும் உங்கள் கதிரவனின் முகமும் மட்டும் தான்.

மற்ற கட்சிகளில் பலரும், பலவற்றை நம்பி தேர்தலில் போட்டியிடும் நிலையில், நான், உங்களையும், இந்த மண்ணச்சநல்லுார் மண்ணையும் மட்டுமே நம்பி களத்தில் இருக்கிறேன். மண்ணும், மண்ணச்சநல்லுாரும் இருக்கும் வரை இந்த கதிரவனின் காலடித்தடம் உங்களைச் சுற்றியே இருக்கும். என எனது பிரச்சாரத்தின் போது உரையாற்றி வாக்குகள் சேகரித்தார் .

பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான ஒரு உடன் சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.