Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்திலேயே பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வேட்பாளர் லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா.பணத்திமிரில் எளிதாக வெற்றி பெறுவேன் என்று அலட்சியமாகபிரச்சாரம். 3ம் வகுப்பு படித்த லீமா ரோஸ் .

0

'- Advertisement -

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆவார்.

 

Ad banner

அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் இவர், லாட்டரி தொழில் அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மனைவி. அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து விவரங்கள் அவரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய செல்வந்த வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

 

லீமா ரோஸ் மார்ட்டின், ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த இவரது கல்வித் தகுதி மூன்றாம் வகுப்பு வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ட்டின் குடும்பத்தின் அறக்கட்டளையான மார்ட்டின் ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலராக வருபவர். இந்திய ஜனநாயக கட்சியில் (ஐஜேகே) 14 ஆண்டுகள் இருந்து, இரண்டு மாதம் முன்பு அதிமுகவில் இணைந்து மகளிர் பிரிவின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 

லால்குடி தொகுதியில் கிறிஸ்தவர் மற்றும் உடையார் சமூக வாக்காளர்கள் அதிகம் உள்ளதால், இந்தத் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அவரது பிரமாணப் பத்திரத்தின்படி, லீமா ரோஸின் சொத்து மதிப்பு சுமார் 1,041 கோடி ரூபாயாக உள்ளது. இதில் நகரக்கூடிய சொத்துக்கள் 139.62 கோடி ரூபாய் அளவில் உள்ளன. இவற்றில் தங்கம், வைரம், வெள்ளி, பங்குகள் போன்றவை அடங்கும். அசையா சொத்துக்கள் 909.94 கோடி ரூபாய் மதிப்புடையவை.

 

அவரது கடன்கள் சுமார் 8.57 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 ஆண்டுக்கான அவரது வருமானம் 9.82 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. லீமா ரோஸின் குடும்ப சொத்து மதிப்பு மொத்தம் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களது மகன் ஜோஸ் டைசன் மார்ட்டினின நகரக்கூடிய சொத்துக்கள் 225.56 கோடி ரூபாயும், அசையா சொத்துக்கள் 439.21 கோடி ரூபாயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆவார். அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் இவர், லாட்டரி தொழில் அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மனைவி. அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்பட்ட சொத்து விவரங்கள் அவரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய செல்வந்த வேட்பாளராக அடையாளப்படுத்தியுள்ளது.

இந்த பணத்தால் தான் இவர் ஓட்டுகளை விலைக்கு வாங்கி எளிதாக வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.