Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிகாலையில் ஈஸ்டர் மாஸ் முடிந்தவுடன் மாஸாக கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரித்த திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்.

0

'- Advertisement -

இன்று ஈஸ்டர் தினம்.திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் திருச்சி திருவெறும்பூர் தொகுதி முழுவதும் பம்பரமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் .

 

Ad banner

இந்த நிலையில் இன்று அதிகாலை ஈஸ்டர் தினத்தை முடிந்து கிறிஸ்தவர்கள் அதிக அளவில் மாஸ் (பூஜை) முடிந்து சர்ச்சுகளில் இருந்து வெளிவந்தனர்.

ஒட்டக்குடி பகுதியில் அமைந்துள்ள சர்ச்யில் மாஸ் முடிந்து வந்த கிறிஸ்தவர்களிடம் அதிமுக அரசின் சாதனைகளையும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் எடுத்து கூறினார்.மேலும் தான் வெற்றி பெற்றவுடன் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தி அந்தந்த பகுதிகளில் உள்ள  பொதுமக்கள் கூறும் குறைகளை கேட்டறிந்து முதல் 100 நாட்களுக்குள் அக்குறைகளை சரி செய்ய முயற்சி செய்வேன் என அப்பகுதி பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் குமாருடன் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக் , அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராஜ மணிகண்டன், ஒன்றிய அவை தலைவர் அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் தண்டபாணி, பாலசுப்ரமணியன், பாஸ்கரன் கூட்டனி கட்சியின் சார்பில் பாரதிய ஜனதா சரவணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர், தமிழ் மாநில காங்கிரஸ் குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.