Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் இன்று மனு தாக்கல் செய்த பின் அதிமுக வேட்பாளர் மனோகரன் பேட்டி

0

'- Advertisement -

தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளரான கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர். மனோகரன் இன்று ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Ad banner

முன்னதாக அதிமுக வேட்பாளர் மனோகரன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி காட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயலாளர் லீமா ரோஸ், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உமாநாத், தமிழ் மாநில காங்கிரஸ் தனபால் மற்றும் தொண்டர்கள் புடைசூழ திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டரில் இருந்து திருவானைக்கோவில் ட்ரங்க் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 

TVK ad

மனு தாக்கல் செய்த பின்பு ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆசியுடன் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார்.

 

கடந்த அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறியும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதியும் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க உள்ளேன்.

ஏற்கனவே நான் பிரச்சாரம் மேற்கொண்ட பகுதிகளில் எல்லாம் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.எனவே இந்த தொகுதியில் பெரியாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறினார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.