அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வேங்கூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.


அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திருச்சி திருவெறும்பூரை அடுத்த வேங்கூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டமானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளருமான ப.குமார்
தலைமையில் நடைபெற்றது.
அப்போது நிர்வாகிகள் வேட்பாளர் ப.குமாருக்கு மலர் தூவியும், பட்டாசுகள் வெடித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு கொண்டு வந்த நலத்திட்டங்களையும், தற்பொழுது அதிமுகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சென்று பிரச்சாரம் செய்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

