Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் ….

0

'- Advertisement -

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான குமார். 21. 04.1971 ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ள புனல் குளம் என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் பெயர் தந்தை பழனிவேல் -தாயார் முனியம்மாள்.

 

இவரது மனைவியின் பெயர் காயத்ரி (இல்லத்தரசி ) ,ஒரு மகன் மற்றும் மகன் உள்ளனர்.

 

அடிப்படை உறுப்பினராக அதிமுகவின் இணைந்த ப..குமார் மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு இணை செயலாளர்,அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர்.பதவிகளில் சிறப்பாக பணியாற்றி, 2018 ம் ஆண்டு முதல் தற்போது வரை சித்த தெற்கு மாவட்ட செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

 

அதிமுகவின் உறுப்பினரான ப. குமார் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமானை 4,335 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 2,98,710 ஆகும். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடைய கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலிலும் ப. குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த மு. அன்பழகனை விட அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

தற்போது திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள ப.குமாருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக களப்பணி ஆற்றி வெற்றி பெற்ற அனுபவத்தைக் கொண்டு தற்போது திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெரும் முனைப்பில் தேர்தல் பணியாற்ற உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.