Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக அறிவித்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்.தொகுதி மாறி போட்டியிட உள்ள முன்னாள் அமைச்சர்கள் விபரம்….

0

'- Advertisement -

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.

முதல்கட்டமாக தற்போது மொத்தம் 23 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் சில முக்கிய தலைவர்கள் அதிமுகவில் தொகுதி மாறி உள்ளனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்கண்டனர் கீழ்காணும் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

எடப்பாடி – எடப்பாடி பழனிச்சாமி

 

வேப்பனஹள்ளி – கேபி முனுசாமி

 

திண்டுக்கல்லில் – திண்டுக்கல் சீனிவாசன்

 

நந்தம் – நத்தம் விசுவநாதன்

 

தொண்டாமுத்தூர் – எஸ்பி வேலுமணி

 

குமாரபாளையம் – தங்கமணி

 

ராயபுரம் – டி ஜெயக்குமார்

 

மைலம் – சிவி சண்முகம்

 

மதுரை மேற்கு – செல்லூர் ராஜு

 

பாலக்கோடு – கேபி அன்பழகன்

 

நன்னிலம் – ஆர். காமராஜ்

 

வேதாரண்யம் – ஓஎஸ் மணியன்

 

விராலிமலை – டாக்டர் சி விஜயபாஸ்கர்

 

கோவில்பட்டி – கடம்பூர் சி ராஜு

 

திருமங்கலம் – ஆர்பி உதயக்குமார்

 

சிவகாசி – ராஜேந்திர பாலாஜி

 

மதுரவாயல் – பெஞ்சமின்

 

கலசபாக்கம் – அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி

 

திருப்பரங்குன்றம் – ராஜன் செல்லப்பா

 

பவானி – கேசி கருப்பணன்

 

ஜோலார்பேட்டை – கேசி வீரணி

 

கரூர் – எம்ஆர் விஜயபாஸ்கர்

 

அரியலூர் – தாமரை எஸ் ராஜேந்திரன் என மொத்தம் 23 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

 

தொகுதி மாறும் வேட்பாளர்கள்

 

சிவகாசியில் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். 2011, 2016 தொகுதிகளில் இவர் தொடர்ச்சியாக வென்ற தொகுதி சிவகாசி. அதனால் அங்கே மீண்டும் வந்துள்ளார். அங்கே மீண்டும் வெல்ல முடியும் என்று நினைக்கிறார்.

கடந்த முறை, அதாவது 2021 சட்டசபை தேர்தலில்.. இவர் போட்டியிட்ட தொகுதியான ராஜபாளையம் தொகுதியில் இருந்து மாறி உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் இவர் களம் கண்டார். ஆனால் அங்கே தோல்வி அடைந்தார். இதனால் இந்த முறை சிவகாசி தொகுதி மாறி உள்ளார்.

 

இன்னொரு முக்கியமான நபர் சி.வி. சண்முகம். எம்பியான இவர் இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தும் கூட மீண்டும் போட்டியிடுகிறார் . அதிமுக வென்று ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதால் மீண்டும் இவர் எம்பியாக இருக்கும் போதே போட்டியிடுகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் இவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனால் இந்த முறை மயிலம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.

அவ்வையார்குப்பம்தான் இவரின் சொந்த ஊர். மயிலம் தொகுதிக்குள் அந்த ஊர் வருவதால் மண்ணின் மைந்தன் என்ற பெயரோடு இவர் பிரச்சாரம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

விழுப்புரம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு எதிராக விழுப்புரம் தெற்கு மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி சி.வி சண்முகத்திற்கு எதிராக அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். சி.வி சண்முகத்தின் மீதான குற்றச்சாட்டு பட்டியலை அதிமுக தலைமையிடம் வழங்குவோம் எனவும் அவர் சூளுரைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் சொந்த ஊரில் களமிறங்குவதே பாதுகாப்பு என சி.வி. சண்முகம் களம் இறங்க உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.