திருச்சி மாவட்டத்தின் வழியாக பல ஊர்களுக்கு ரயில் சேவையை தென்னக ரயில்வே வழங்கி வருகிறது.
தென்னக ரயில்வேயின் பராமரிப்புப் பணிகள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் அவ்வப்போது ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் 2026 மார்ச் 24 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை இயக்கப்படவுள்ள சில எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து பாதையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.திருச்சி – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் :
திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56700) வருகிற 25, 27, 30 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து கும்பகோணம் வரை மட்டுமே இயங்கும்.
மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்:
இதேபோல் மயிலாடுதுறை – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16847) மேற்கண்ட தேதிகளில் மயிலாடுதுறை – கும்பகோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது கும்பகோணத்தில் இருந்து மதியம் 1.08 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குருவாயூர்-சென்னை
செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:16848) வருகிற 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16352) வருகிற 26-ந்தேதி மற்றும் 29-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:12666) வருகிற 28-ந்தேதியிலும், குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:16128) வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும், கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07229) வருகிற 27-ந்தேதியிலும் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும்.
திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்
திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16843) மார்ச் 24-ம் தேதி முதல் 29-ந்தேதி வரை திருச்சி ஜங்ஷனில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், இருகூர் வழியாக திருப்பி விடப்படும் என அறி விக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலானது பீலமேடு, சிங்கநல்லூர், கோவை வடக்கு மற்றும் கோவை ஆகிய சந்திப்பு களில் நிற்காது. மேலும் கூடுதலாக போத்தனூரில் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16160) வருகிற 29-ந்தேதி கோவை சந்திப்பை தவிர்த்து, இருகூர், போத்தனூர் வழி யாக செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.

