Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடி தொகுதி அன்பில் கிராமத்தில் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கி பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் .அச்சத்தில் லால்குடி திமுகவினர்.

0

'- Advertisement -

சட்டசபை தேர்தல் நடந்த நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த ஊரான அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காளை வளர்ப்பு சங்கம் சார்பில் மாபெரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அதிமுக மகளிர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார்.அவருடன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார்,லால்குடி ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

லீமா ரோஸ் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இருசக்கர வாகனங்களை பரிசாக வழங்கினார்.

 

இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 550 காளைகள்,மற்றும் 230 மாடு பிடி வீரர்கள்உற்சாகமாக கலந்து கொண்டனர்.

 

எந்த ஒரு பிரதான கட்சியும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடியில் போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி மூலம் பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் லால்குடி தொகுதி முழுவதும் பத்து நாட்களுக்கு முன்னரே அனைத்து வீடுகளுக்கும் பரிசு பொருட்களும் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

லீமா ரோஸ் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியை தொடங்கிய காலம் முதல் அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்தார். 14ஆண்டு ஐ ஜே கே யில் பயணித்து வந்த லீமா ரோஸ் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் ஐ ஜே கே கட்சியில் இருந்து விலகினார்.தொடர்ந்து பிப்ரவரி 17ஆம் தேதி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னலியில் அதிமுகவில் சேர்ந்தார்.பிப்ரவரி 25ஆம் தேதி அவருக்கு அதிமுக மாநில மகளிர் அணி இணை செயலாளர் பதவியை வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி.

தற்போது உடையார் சமுதாய மக்களின் ஓட்டு அதிகம் உள்ள லால்குடி தொகுதியில் (அமைச்சர் நேருவை விட பணத்தில் செவ்வ செழிப்பான) லீமா ரோஸ் போட்டியிட உள்ளதால் அமைச்சர் கே. என். நேருவின் சொந்த ஊரான லால்குடி திமுகவினர் அச்சத்திற்கு உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.