Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாணவி நிர்பயாவுக்கு நீதி வேண்டி திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

0

'- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் ஊரில் வசித்து வந்த பிளஸ் 2 பொது தேர்வு எழுதி வந்த நிர்பயா என்ற மாணவியை சில நயவஞ்சக கயவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி முகம் உள்ளிட்ட உடல் பாகங்களை சிதைத்து கொடூரமாக கொன்ற குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

மாணவி நிர்பயாவுக்கு நீதி வேண்டி திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், மாமன்ற துணை மேருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் இன்று சனிக்கிழமை மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ரத்னவேல்,பகுதி செயலாளர்கள் சுரேந்தர்,வெங்கட் பிரபு,கலைவாணன்,நிர்வாகிகள் டி.ஆர்.சுரேஷ் குமார்,வழக்கறிஞர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.