அன்பில் தர்மலிங்கத்தின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் .
திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் மேனாள் அமைச்சரும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின்
32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன் மாநிலங்கள் அவை உறுப்பினர் கவிஞர் சல்மா, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், பகுதி கழகச் செயலாளர் மோகன் தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்டத் துணைச் செயலாளர்கள்
மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கிளை, வட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

