Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் .

0

'- Advertisement -

திருச்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் .கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.

திருச்சி கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 51 )ஆட்டோ டிரைவர் . இவர் தன் ஆட்டோவில் பயணிகளுடன் கன்டோன்மென்ட் வரை சவாரி சென்றார். அப்போது அவரது ஆட்டோவின் பின்னே இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து மோதி உள்ளனர்.

இதுகுறித்து மோகன்ராஜ் அவர்களிடம் கேட்டபோது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் அந்த மர்ம நபர்கள் மோகன்ராஜை வாயில் தாக்கி பல்லை உடைத்தனர். காயம் அடைந்த மோகன்ராஜ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கண்ட்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.