திருச்சியில் இரும்பு கடை உரிமையாளரை அருவாளால் வெட்டிய வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை வேம்படி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 51 ) இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்தவர் திலீபன் ராஜ் (வயது 25 ) . இவர்கள் இருவருக்கும் இடையே சிறிய தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் துரைராஜ் நேற்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்ற போது திலீபன் ராஜ் டூவீலரில் துரைராஜ் மீது மோதினார்.
இது குறித்து கேட்டபோது திலீபன்ராஜ் துரைராஜை அரிவாளால் அவரை வெட்டினார். இதில் காயமடைந்த துரைராஜ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபன் ராஜை கைது செய்தனர்.
பின்னர் அவரை ஜாமீனில் வெளியே விட்டனர்.

