உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி மாநகராட்சி மேயர்.அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு .பஞ்சபூர் பஸ் நிலைய பணிகள் குறித்த முழு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.கவுன்சிலர் அம்பிகாபதி.
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி மாநகராட்சி மேயர்.அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு .

மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு:
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் மோதல்
வாக்குவாதம் செய்து, வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் ம மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன்,
துணை மேயர் ஜி.திவ்யா தனக்கொடி ஆகியோர் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர்
பி. சிவபாதம் ,மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
சுரேஷ் (சிபிஎம்) :-
எனது டில் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மேல்நிலை நிறுத்தி வைக்க தொட்டி கட்ட ஆவண செய்த அமைச்சருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜவகர் (காங்கிரஸ்) :-
செலவு செய்தால் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம்..
பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மேயர் மற்றும் ஆணையர்
ஆகியோர் திட்டங்களை அறிவித்துள்ளனர்.
20 ஆண்டுகால கோரிக்கையான பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், 40 ஆண்டு கால கோரிக்கையான ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் கட்டியதற்கு நன்றி தெரிவிக்கிறோம் இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன்.
ந.பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) :-
வாய்க்கால் பராமரிப்புக்கு ரூ. 100 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது எந்தெந்த நீர் நிலைகளில் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது?
மேயர் அன்பழகன்:-
இதன் முக்கிய நோக்கம் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதை தடுப்பதுதான். குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்கள் நிறைந்த பகுதிகளில் எளிதில் குப்பைகளை கொட்டாத வண்ணம் கம்பி வேலி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் உயிரி கொண்டான் இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட மாநகருக்குள் செல்லும் நீர்நிலைகளில் மேற்கொள்ள கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது
எல்ஐசி சங்கர் (திமுக):-
திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் வருவாய் இல்லாமல் கிடக்கிறது.
பஞ்சபூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் மூலமாகவும் மாநகராட்சிக்கு எதிர் பார்த்த வருவாய் கிடைக்கவில்லை கடந்த இரண்டு மாதமாக அங்கு ஏசி வேலை செய்யவில்லை
பைஸ் அகமது: (மனிதநேய மக்கள் கட்சி) :-
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதனால் எங்கள் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் சத்யா நகர் மற்றும் புது மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது அதனை சரி செய்து தர வேண்டும் .
வழக்கறிஞர் செந்தில் (திமுக):-
அனைத்து திசைகளிலும் இருந்து போற்றும் வகையில் திருச்சி மாநகராட்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மண்டலக் குழு தலைவர் மதிவாணன் ஆகியோர் மூலமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் பட்ட அல்லல்களுக்கு
திமுக ஆட்சியில் முதல்வரின் திட்டங்களால் தீர்வு ஏற்பட்ட சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டு பணிகள் திருச்சி மாநகராட்சியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 2023 இல் கோட்ட வாரியாக சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் சமுதாய எனது வாடில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் கூடம் அமைக்கப்படும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை அதை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பட்ஜெட்டை வரவேற்றுப் பேசினார்.
கோ.கு. அம்பிகாபதி (திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர்):-
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகளுக்கு மாநகராட்சி பொது நிதி முழுவதையும் முன்னிட்டு செலவழித்து விட்டனர்.இதனால் கடந்த இரண்டு வாரங்களாக பல ஆண்டுகளாக வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை.கேட்டால் அதை செய்துள்ளோம், இதை செய்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.
பஞ்சபூர் பஸ் நிலையம் இதுவரை நடந்த பணிகள் குறித்து முழு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
முத்துச்செல்வம் (நிதிக்குழு தலைவர்):-
திருச்சி மாநகராட்சியில் எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகள் நடந்துள்ளன.திருவெறும்பூர் பஸ் நிலையம், ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது என்றார்.
அப்போது அதிமுக கவுன்சிலர்களுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அடுத்து,அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு. அம்பிகாபதி அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அவர்கள் வெளியே வந்தபின் நிருபர்களிடம்
திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு
அம்பிகாபதி கூறும்போது :-
உதாரணமாக எனது வார்டில் மட்டும் ஆண்டுக்கு ரூ,20 கோடி ரூபாய் வருமானம் மாநகராட்சிக்கு கிடைக்கிறது. (தொழில் வரி வீட்டு வரி தண்ணீர் வரி என பல வகையில்)ஆனால் தெரு விளக்கு சாலை வசதி என ரூ.5 மட்டுமே செலவிடப்பட்டுள்ளது மீதம் ரூ.15 போடி வார்டு மட்டும் இருந்தால் 65 வார்டுக்கு எவ்வளவு தொகை நீ தான் இருக்கும் ஆனால் குறைந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணம் அனைத்தும் பஞ்சபூர் பேருந்து நிலையம்,லாரி முனையம் புதிய மார்க்கெட் என மாநகராட்சிக்கு வருமானம் இல்லாத வகையில் பணம் முடக்கப்பட்டுள்ளது.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகளுக்கு பொது நிதி முழுவதையும் செலவழித்து விட்டனர் இதனால் வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை கடந்த பட்ஜெட்டில் 110 கோடிக்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
பஞ்சப்பூர் பேருந்து முனையம் முன்பாக விபத்துகளை தடுக்க என் மேம்பாலம் கட்டவில்லை என கேள்வி எழுப்பினேன். அதற்கு மேயர் உங்கள் பொதுச் செயலாளரிடம் சொல்லி பிரதமரிடம் நிதி ஒதுக்குங்கள் என கேலி செய்கிறார்கள். இதனால் வெளிநடப்பு செய்தோம்.
இது பற்றி கேள்வி எழுப்பினால் எங்களை அவமதிக்கிறார்கள் என்றார்.
தொடர்ந்து மாநகராசி அதிமுக கொறடா சி.அரவிந்தன் கூறும்போது :-பஞ்சப்பூரில் ரூபாய் 250 கோடி செலவில் கட்டப்பட்ட லாரி முனையம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை இது தொடர்பாக மாநகராட்சியில் கேள்வி எழுப்பியபோது மேயர் பதிலளிக்காமல் அவரது தூண்டுதலின் பேரில் திமுக கவுன்சிலர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மொத்தம் 133 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

