Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளரை நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன்.

0

'- Advertisement -

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு நெறியாளர், தொலை தூரக்கல்வி இயக்குனர் பதவிகளுக்கு சிண்டிகேட் உறுப்பினர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மூன்று பதவிக ளுக்கும் விண்ணப்பம் சரிபார்க்கும் பணி கடந்த 12ம் தேதி அன்று சரிபார்க் கப்பட்டது. மறுநாள் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தை எழுதி கையெழுத்திட கவர்னரால் நியமிக்கப்பட்ட ஒருவர், இதில் கலந்து கொள்ள இயலாது என்று கடிதம் கொடுத்துள்ளதாக அறிவித்து இக்குழு கலைக்கப்பட்டது.

எவ்வித காரணமும் பேராசிரியர்களிடம்  தெரிவிக்காமல் புதுக்குழு அமைக்கப்பட்டு இவ்வளவு நாள் காலம் தாழ்த்தி, தானே இப்பதவியில் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவாளர் (பொ) காளிதாஸ் முரணான கருத்துக்களை உள்நோக்கத்துடன் கல்லுாரி கல்வி ஆணையரிடம் தெரிவித்து, வரும் மார்ச் 3ம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குழுவில் விருப்பம் இல்லாதவர்க ளுக்கு பதிலாக மூத்தவர் ஒருவரை கவர்னரால் நியமித்து அப்போதே முடித்திருக்கலாம். அல்லது 4 நபர்களை வைத்து அன்றே அறிவித்திருக்கலாம். அவ்வாறு நடத்தாமல் காலம் தாழ்த்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் செயல் பட்ட பதிவாளர் காளிதாஸை நீக்கிவிட்டு மூத்த பேராசிரியர் ஒருவரை நியமிக்கவேண்டும். ஓராண்டு முடிவுற்ற நிலையில் குறைந்த அனுபவம்

உள்ள ஒருவரையும், ஆசிரியர் பணியில் இல்லாத மற்றொருவரையும் நீக்கி விட்டு அனுபவம் பெற்ற பேராசிரியர்களை துணை வேந்தர் குழு உறுப்பினராக நியமிக்க வேண்டும். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பெயரளவுக்கு மார்ச் 3ம் தேதி சரிபார்ப்பு குழு கூட இருப்பது கண்டனத்துக்குரியது.

கடந்த 12ம் தேதி கூடிய குழு கலைக்கப்பட்டது ஏன் என்று புரியவில்லை.

1982 ல் ஆரம்பிக்கப்பட்ட இப் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது இல்லை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர். உயர்கல்வித்துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் தலையிட்டு உடனடியாக முடித்து வைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.