தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. 2 குற்றவாளிகளை தனியாக சென்று பிடித்த திருவெறும்பூர் ஆய்வாளருக்கு பாராட்டு.
தூக்கில் தொங்கிய மனைவி. வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட கணவன் மாமியாருக்கு அரிவாள் வெட்டு. பேரை தனியாக சென்று பிடித்த திருவெறும்பூர் ஆய்வாளருக்கு பாராட்டு.
திருவெறும்பூர் அருகே கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதால் மனம் உடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மனைவியின் சகோதரர்கள் கணவர் மற்றும் மாமியாரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ இவரது மனைவி கனிமொழி (வயது 32) இவர்கள் இருவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்து உள்ளது.
தற்போது வரை இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ஜான் பிரிட்டோ குமரேசபுரம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும் இதனால் ஜான் பிரிட்டோவிற்கும் கனிமொழிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம்
இரவு 10.30 மணிக்கு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதனால் கனிமொழி அவருடைய அண்ணன் திலீப் என்பவருக்கு போன் மூலம் ஊருக்கு வந்து விடுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
திலீப் தனது உறவினர் ராஜேஷ் என்பவரையும் தனது தாய் மங்களம் மேரியையும்
அழைத்துக் கொண்டு ஊரிலிருந்து கீழ முல்லக்குடிக்கு நள்ளிரவு 12.10 மணிக்கு வந்த போது வீட்டில் பெட்ரூம் கதவு உள்தாளிட்டு இருந்ததால் ராஜேஷ் கதவை உடைத்து உள்ளே சென்ற பொழுது கனிமொழி துப்பட்டாவால் பேனில் தூக்கு மாட்டிய நிலையில் இருந்தவரை துப்பட்டாவை அறுத்து கீழே இறக்கியுள்ளார்கள்.அப்பொழுது வீட்டின் முன் கணவன் பிரிட்டோ மற்றும் அவரது தாய் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
கோபத்தில் இருந்த திலீப் வீட்டில் கிடந்த கத்தியால் ஜான் பிரிட்டோ தலை மற்றும் இரண்டு கால்களில் வெட்டியதில் ஜான் பிரிட்டோவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும்
ஜான் பிரிட்டோவின் தாயையும் தாக்கியுள்ளார்கள்.
தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தனியாக சென்று இருவரை வெட்டிய திலீப் மற்றும் ராஜேஷ் 2 குற்றவாளிகளின் தனியாக கைது செய்த ஆய்வாளர் செந்தில்குமாரை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
பின்னர் கனிமொழியை அவர் அம்மா வாடகை கார் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளார்
அங்கு கனிமொழியை பரிசோதனை செய்த மருத்துவர் குழு கனிமொழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
கனிமொழிக்கும் ஜான் பீட்டர் இருவருக்கும் இடையே திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் திருச்சி உதவி கலெக்டர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் காயம் அடைந்த ஜான் பீட்டர் அவரது தாயார் பாத்திமாமேரியும் திருச்சி மகாத்மா காந்தி நினைவுஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

