Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் இளம் தாய் தற்கொலை . காரணம் …

0

'- Advertisement -

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் இளம் தாய்.தூக்கு போட்டு தற்கொலை .

உடலை கைப்பற்றி பொன்மலை போலீசார் விசாரணை .

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது மனைவி தமிழ் பிரியா (வயது 32). இந்த தம்பதிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தமிழ் பிரியா அறுவை சிகிச்சை மூலம் தான் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து இருந்து உள்ளார் .

இதனால் அவருக்கு அடிக்கடி சிறு சிறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்துக்குஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் செல்வ பிரபு பெயிண்டிங் வேலைக்கு சென்று உள்ளார்.பின்னர் மாலை வீடு திரும்பிய போது மனைவி தமிழ் பிரியா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இது இதுகுறித்து பொன்மலை காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது .தமிழ் பிரியாவின் சகோதரர் வீராசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.