ஆளும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வலுவாக கல்லா கட்டி வரும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை கண்டித்த திருச்சி கலெக்டர்.
முசிறி நடராஜா திடலில் தற்போது நடந்து வரும் தனியார் பொருட்காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் , செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குனர் ஆகியோருக்கு பெரும் தொகை தந்தால் தான் அனுமதி கிடைக்கும் என கூறி கலெக்டர் கலெக்டர் அலுவலக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகர் பெரும் தொகையை வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது .
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திமுக ஆட்சியில் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிக்கு வந்த சுதாகர் தொடர்ந்து இங்கேயே பணிபுரிந்து வந்தாலும்
திமுகவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார் என கூறப்படுகிறது . திமுக ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் தெரியாமல் நடைபெறும் சில குறைபாடுகளை அதிமுகவினருக்கு தெரிவித்து வருகிறாராம் .
தற்போது அனைவரிடமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி அமைக்கும் ஏனென்றால் எஸ் ஐ ஆர் பணியில் அரசு ஊழியர்களை நியமித்து அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது . இதுவே திமுக ஆட்சி இந்த முறை வராது என அனைவரிடமும் கூறி வந்து கொண்டு இருக்கிறார் . இதை அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகரை அழைத்து ரைட் & லெப்ட் வாங்கி கடைசி வார்னிங் செய்து உள்ளார் .( இது திருச்சி கலெக்டர் அலுவலக ஊழியர்களே சிலர் கூறியது )
திமுக ஆட்சியில் பணியில் வந்து திமுக ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு கொண்டு பணியில் நன்றாக கல்லா கட்டி வரும் திருச்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா ?

