Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மீன் மார்க்கெட் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செயல்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.

0

'- Advertisement -

Ad banner

தமிழக அரசு கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுமையும் எவ்வித தளர்வுகளுமின்றி 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மேலும் தற்போது 14.06.2021 காலை 06.00 மணி வரை மேற்படி முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்திலும் மேற்படி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாநகரபகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மீன் சந்தைகளில் மீன் விற்பனை செய்வதற்கு அனுமதியில்லை.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட மத்தியபேருந்து நிலையத்தில் மொத்த விற்பனை செய்யும் மீன்கடைகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இங்கு மீன் வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. சில்லரை விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களது ழுழு ஒத்துழைப்பினை நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.