திருச்சியில் ஒரு மணி நேரத்தில் 600 பரிசோதனை செய்யும் இயந்திரத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்
கொரோனா காலத்திலும் மற்ற மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ளம் வகையில்
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் புங்கே (Bunge) நிறுவனம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிலான இரத்த பரிசோதனை இயந்திரத்தை தொடங்கி நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சா கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்த இயந்திரம் 1 மணி நேரத்தில் 600 பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் புங்கே நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.