Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்திலேயே எந்த கவுன்சிலரும் செய்யாததை செய்து வரும் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் .

0

'- Advertisement -

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 14வது வார்டு அஇஅதிமுக கவுன்சிலர் அரவிந்தன்

 

இவர் கவுன்சிலராக வெற்றி பெற்ற நாள் முதல் தனது வார்டு பொதுமக்களுக்காக பல்வேறு மக்கள் நலப்பணித் திட்டங்கள் மூலமாக 14 வது வார்டு மக்களிடம் மக்களிடம் மட்டும் இல்லாமல் திருச்சி மாநகர மாவட்டம் முழுவதும் மிகவும் பிரபலமானவர்.

 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாநில அம்மா பேரவையின் இணைச் செயலாளராகவும் சிறப்பாக கட்சி பணி ஆற்றிய வருகிறார் .

 

இவர் தற்பொழுது உங்களோடு நான் என்கின்ற தமிழகத்திலேயே யாரும் செய்யாத புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக பொதுமக்களின் அடிப்படை தேவைகளான ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் ஆதார் அட்டையில் திருத்தங்கள் மற்றும் முதல்வர் காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றார். அது அந்தந்த பகுதியில் சென்று முகாம் அமைத்து பணியாற்றி வருகிறார் .

அந்த வகையில் நேற்று அவருடைய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டமும், அரசு பணியாளர் அட்டைகள் சரிபார்ப்பு முகாமும் நடைபெற்றது. இந்த முகாமில் ஆண்டாள் தெரு, என் எஸ் பி சாலை, போன்ற முக்கிய தெருக்களை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்ற பொதுமக்கள் அனைவரும் அரவிந்தனின் சகோதரர் ஆவின் முன்னாள் சேர்மனும், முன்னாள் கவுன்சிலரும், அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் போன்ற சிறப்பாக பணியாற்றி வருகிறார் என கவுன்சிலர் அரவிந்தனை பாராட்டி சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.