Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெண்ணின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களின் மீது 2 மாதமாக எந்த நடவடிக்கையும் இல்லை. நாளை முதல்வர் வரும் வழியில் காத்திருப்பு போராட்டம்

0

'- Advertisement -

தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொறியிருப்பதாவது:-

 

சமூக நீதி ஆட்சியில பாக்கியலட்சுமி என்ற பெண்மணிக்கு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம்.

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னம்பலப்பட்டி பகுதியிலுள்ள வசித்து வரும் முருகன் என்பவரின் மனைவி M.பாக்கியலட்சுமி என்ற பெண்மணியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏழுமலை, இளங்கோவன், பிரபாகரன், ஆகியோர் கொலை வெறியுடன் தாக்கி அவருடைய பிறப்புறுப்பில் எட்டி உதைத்து மண் அள்ளி போட்டும் அவருடைய கணவரையும் அடித்தும் காரில் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தும், இரத்த வெள்ளத்தில் வையம்பட்டி காவல்நிலையத்தில் கொடுத்தும் எந்தப் பயனும் இல்லாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மத்திய மண்டல காவல் துணை தலைவர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் இன்று வரை கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய முடியவில்லை.

எனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டி வருகின்ற நாளை வியாழக்கிழமை 8/5/2025 அன்று காலை 11:00 மணிக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில திருச்சி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி , சாமானிய மக்கள் நலக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என திருச்சி ரமணா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை திருச்சி வரும் தமிழக முதல்வர் வரும் வழியில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.