Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கல்லணை ரோட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரின் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை.

0

திருச்சி அருகே தனியாா் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் 2-ஆம் நாளாக நேற்று வெள்ளிக்கிழமையும் சோதனை நடத்தினா்.

திருச்சி கேகே நகர் பகுதியை சோ்ந்த வில்சன் மைக்கேல் என்பவா், திருச்சி – கல்லணை செல்லும் சாலையில் டாக்டா் தோப்பு பகுதியில் ஜாஸ்கான் எனா்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாா்.

இந்நிறுவனத்தில் வாகனங்கள் மற்றும் ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் உற்பத்தியும், சூரிய மின் தகடுகளை (சோலாா் பேனல்) மின் உற்பத்திக்கு ஏற்ப வடிவமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அங்கு சென்னை மற்றும் திருச்சி வருமான வரித்துறையைச் சோ்ந்த 6 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். அப்போது, நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த அவா்கள் அங்கிருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனர் .

ஒருபுறம் அதிகாரிகளது சோதனையும், மறுபுறம் வழக்கம்போல் சிறிய அளவிலான உற்பத்தி பணிகளும் நடைபெற்றன.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோட்டைச் சோ்ந்த ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். தற்போது திருச்சியில் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் ஜாஸ்கான் எனா்ஜி நிறுவனத்தில் ராமலிங்கமும் பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை முதல் இரண்டு நாள்களாக சோதனை நடைபெற்று வருகிறது.

இது ஒரு வழக்கமான ஒரு சோதனைதான் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு சோதனைக்கு பின்பு தான் விவரங்கள் கூற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.