அரியலூரில் ரயில் பயணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவா் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி, பாரதி சாலை, ரோகினி குடியிருப்பில் வசித்து வருபவா் மதியழகன் (வயது71). ஓய்வுப் பெற்ற பாரத ஸ்டேட் வங்கி மேலாளா். கடந்த 4 ஆம் தேதி இவரும், இவரது மனைவி சுசிலாவும் விழுப்புரம் சென்றுவிட்டு, அன்றிரவு அங்கிருந்து திருச்சி செல்வதற்காக பல்லவன் அதிவிரைவு ரயிலில் ஏறியுள்ளனா். ரயில் அரியலூா் ரயில் நிலையம் வந்த போது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா் சுசிலா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார் உடனே சுசிலா செயினை கையால் பிடித்துக் கொண்டார் இதனால் செயினில் பாதியை (3பவுன்) பறித்துக் கொண்டு அங்கிருந்து தலைமறைவானா் அந்த மர்ம நபர் .
இதனைத் தொடர்ந்து மதியழகன் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பிலாக்குறிச்சி அருகேயுள்ள வீராக்கண், கீழத் தெருவைச் சோ்ந்த திருநாவுக்கரசு (வயது 37) என்பவா் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.